மத்தியபிரதேசம் மாநிலம் ஜபல்பூர் பகுதியில் இந்திய மருத்துவ கூட்டமைப்பின் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மருத்துவக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் அமரேந்திர பாண்டே வரவேற்புரை ஆற்றினார். இதற்கு மேடையின் கீழே அமர்ந்திருந்த குவாலியர் பிரிவை சேர்ந்த உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இவர்கள் கீழே நின்று கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் திடீரென மேடையின் மீது ஏறி அமரேந்திர ராவை தாக்க, அவரும் பதில் தாக்குதல் நடத்தினார்.
இதனால் கூட்டத்தில் அடிக்கடி, கைகலப்பு என பரபரப்பு நிலவியது. இந்த தகவலை மருத்துவ கூட்டமைப்பின் புதிய தலைவர் டாக்டர் அபிஜித் பிஷ்னோய் உறுதிப்படுத்தியுள்ளார். இந்த சம்பவம் குறித்து மருத்துவக் கூட்டமைப்பின் மாநில தலைவர் மருத்துவர் ஆர்கே பதக் கூறியதாவது, கூட்டத்தில் நடந்தது மிகவும் வருத்தத்திற்குரிய விஷயம். இது போன்ற சம்பவங்கள் இனி வருங்காலத்தில் நடைபெற கூடாது. தவறு நடந்து இருக்கும் ஆனால் அதற்கு நாங்கள் அனைவரும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க ஒரு விசாரணை கமிட்டி அமைக்கப்படும் என்று கூறியுள்ளார்.