இலங்கையின் முன்னாள் பிரதமரான மஹிந்த ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேறுவதற்கு தடை நீட்டிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கி பல பிரச்சினைகளை சந்தித்துக் கொண்டிருக்கிறது. மக்களின் போராட்டம் வன்முறையாக மாறியதால் அதிபர் கோட்டபாய ராஜபக்சே நாட்டிலிருந்து தப்பினார். தற்போது அவர் சிங்கப்பூரில் இருக்கிறார்.
இதனைத்தொடர்ந்து நாட்டின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார். இந்நிலையில் முன்னாள் பிரதமரான மஹிந்த ராஜபக்சே, நாட்டை விட்டு நாளை வரை வெளியேறக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நாட்டின் உச்சநீதிமன்றமானது, அந்த தடை மேலும் இரு தினங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக உத்தரவு பிறப்பித்திருக்கிறது.