Categories
தேசிய செய்திகள்

காஷ்மீரின் தற்போதைய நிலை தான் என்ன?: இணைய சேவை வழக்கில் அறிக்கை தர உச்சநீதிமன்றம் உத்தரவு!

ஜம்மு – காஷ்மீரில் 4ஜி இணைய சேவை வழங்க உத்தரவிடக் கோரிய வழக்கில் காஷ்மீரின் களநிலவரம் குறித்து வரும் 26ம் தேதிக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு மற்றும் காஷ்மீர் நிர்வாகத்துக்கு உத்தரவிட்ட உச்சநீதிமன்றம் விசாரணையை வரும் 27ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

ஜம்மு காஷ்மீரில், மருத்துவர்கள், நோயாளிகள், பொதுமக்கள், கொரோனா பற்றிய சமீபத்திய தகவல்கள், கட்டுப்பாடுகள், வழிகாட்டுதல்கள், ஆலோசனைகள், தினசரி புதுப்பிப்புகளை அணுக முடியாததால், மொபைல் இணைய தரவு சேவைகளை 4ஜி வேகத்திற்கு மீட்டெடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஊடக வல்லுநர்கள் அதன் தலைவர் மற்றும் பத்திரிகையாளர் பரஞ்சோய் குணா தகுர்தா அறக்கட்டளை மூலம் தாக்கல் செய்த மனுவில், ஆகஸ்ட் மாதம் 2019ம் ஆண்டு 370-வது பிரிவின் கீழ் காஷ்மீர் மக்களின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் சுமார் ஏழு மாதங்களுக்கும் மேலாக இணைய சேவை ரத்து செய்யப்பட்டது. மேலும் கடந்த ஒரு மாதமாக 2ஜி சேவை மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அவ்வகையில் இணையத்தை கட்டுப்படுத்தும் அரசாங்க உத்தரவை ரத்து செய்யவேண்டும். மொபைல் இணைய வேகம் தடை செய்யப்படக் கூடாது. ஜம்மு காஷ்மீரில் வசிப்பவர்களைப் பொறுத்தவரை அத்தகைய உரிமைகளைத் திரும்பப் பெறுவதற்கு தகுதி உடையவர்கள் ஆவர்.

ஜம்மு-காஷ்மீரில் உள்ள குடிமக்கள் ஏற்கெனவே நாடு முழுவதும் உள்ள இந்தியர்களுக்குக் கிடைக்கக்கூடிய வசதிகளை இழக்கக்கூடாது என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு,கடந்த 9ம் தேதி நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு முன்பு காணொலியில் விராசனைக்கு வந்தது. இது தொடர்பாக பதிலளிக்க மத்திய அரசுக்கு ஒரு வார காலம் உத்தரவிட்டது. இதையடுத்து, இந்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, முறையான தகவல் கிடைக்கப்பெறாததால் ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரரின் மரணத்திற்கு சுமார் 500 பேர் திரண்டனர். அவர்களுக்கு கொரோனா குறித்த தகவல்கள் கிடைக்க பெறாததால் இது போன்ற சம்பவங்கள் நடந்து வருகிறது என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து, ஜம்மு காஷ்மீரில் தற்போதைய நிலவரம் குறித்து வரும் 26ம் தேதிக்குள் விரிவான பிராமண பாத்திரம் தாக்கல் செய்ய ஜம்மு காஷ்மீர் நிர்வாகத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு அடுத்த திங்கட்கிழமைக்கு (ஏப். 27ம் தேதிக்கு) ஒத்திவைக்கப்படுவதாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |