Categories
தேசிய செய்திகள்

புலம்பெயர் தொழிலாளர்கள் வழக்கு – மாநில வாரியாக உச்சநீதிமன்றத்தில் அளித்த பதில் மனு விவரம்!

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தர உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புலம்பெயர் தொழிலாளர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தவித்து வருகின்றனர். புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டாலும் அது போதுமானதாக இல்லை. இதனால் பல்வேறு மாநிலங்களில் உள்ள தொழிலாளர்கள் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. அப்போது சிலர் உயிரிழந்ததிருப்பதும் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் பொதுமுடக்கத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் சந்தித்துள்ள பிரச்னை குறித்து தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தியது.

அப்போது புலம்பெயர் தொழிலாளர்களிடம் ரயில், பேருந்து கட்டணம் வசூலிக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்ட பிறப்பித்துள்ளது. ரயில் கட்டண செலவை மாநிலங்களே பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. மேலும் புலம்பெயந்த தொழிலாளர்களை பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கையை மத்திய, மாநில அரசுகள் தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.

மத்திய அரசு பதில் மனு :

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில் ரயில்களில் உணவு, குடிநீர் இன்றி புலம்பெயர் தொழிலாளர்கள் யாரும் உயிரிழக்கவில்லை, ஏற்கனவே இருந்த நோயால் இறந்திருக்கலாம் என குறிப்பிட்டுள்ளது. சுமார் ஒரு கோடி புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பியுள்ளனர். 51 லட்சம் பேர் ரயில் மூலமாகவும், 41 லட்சம் பேர் சாலை மார்க்கமாக சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

தமிழக அரசு பதில் மனு :

புலம் பெயர் தொழிலாளர்களுக்காக உணவு, அத்தியாவசிய சேவை, பேருந்து கட்டணம் என இதுவரை சுமார் ரூ. 163 கோடி செலவிடப்பட்டுள்ளது என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. புலம்பெயர் தொழிலாளர்களுக்காக 212 முகாம்கள் தமிழகத்தில் செயல்படுகின்றன.231 உணவு கூடங்கள் அமைக்கப்பட்டு 8,000 பேருக்கு தினமும் உணவு வழங்கப்படுகிறது என கூறப்பட்டுள்ளது.

சுமார் 3.28 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்துள்ளோம், அவர்களுக்கென தனியாக இணையதளம் அமைக்கப்பட்டு கண்காணித்து வருகிறோம் என்றும் மாவட்டம்தோறும் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றும் தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது

கேரள அரசு :

கேரளாவில் 1 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என கேரள அரசு தகவல் அளித்துள்ளது.

கர்நாடக அரசு :

3 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என கூறப்பட்டுள்ளது.

மேற்கு வங்க அரசு : 

3.97 புலம்பெயர் தொழிலாளர்கள் மேற்கு வங்கத்தில் உள்ளனர் என தகவல் அளித்துள்ளனர்.

பீகார் அரசு : 

28 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் பீகாருக்கு திரும்பியுள்ளனர் என பீகார் அரசு தெரிவித்துள்ளது.

உத்தரபிரதேச அரசு : 

21.69 லட்சம் தொழிலாளர்களை உத்தரபிரதேசம் அழைத்து வந்துள்ளோம் என உத்தரபிரதேச அரசு விளக்கம் அளித்துள்ளது.

குஜராத் அரசு : 

20.5 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என தகவல் அளித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தர அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு மீண்டும் வரும் 9ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |