Categories
தேசிய செய்திகள்

காஷ்மீர் விவகாரம் : மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்….!!

காஷ்மீரில் ஊடகத்திற்கு அனுமதி வழங்காதது தொடர்பாக மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஜம்முவிற்கு இந்தியா வழங்கி வந்த சிறப்பு அந்தஸ்தை இரத்து செய்து மத்திய அரசு ஆகஸ்ட் 5_ஆம் அறிவித்தது.இதை தொடர்ந்து அங்கு பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ளது. 144 தடை உத்தரவு பிறப்பித்து இன்னும் அங்குள்ள தலைவர்கள் வீட்டு காவலில் சிறை பிடிக்கப்பட்டுள்ளன.  மேலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றது.

அங்குள்ள அரசியல் தலைவர்கள் மற்றும் ஊடகங்கள் அனுமதி மறுக்கப்பட்டது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.காஷ்மீரில் செய்தி சேகரிக்க ஊடகத்திற்கு அனுமதி மறுக்கபட்டதாக தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் இது தொடரப்பட்ட 7 நாட்களுக்குள் பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அளித்து உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |