ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை எதிர்த்த மேல் முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகின்றது.
ஐ.என்.எக்ஸ் நிறுவன அந்நிய செலாவணி முறைகேடு வழக்கில் முன் ஜாமீன் கோரி முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அண்மையில் தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக ப. சிதம்பரம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்ற நீதிபதி பானுமதி மற்றும் நீதிபதி ஏ.எஸ்போபண்ணா அமர்வு முன்பு விசாரணைக்கு வருகின்றது.சிதம்பரம் ஏற்கெனவே கைதாகி விட்டதால் முன் ஜாமீன் மனுவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்ட இந்த மனு தள்ளுபடி செய்யும் வாய்ப்பே உள்ளது. இன்று இறுதியாக தான் இந்த வழக்கு விசாரணைக்கு வரும் என்று தெரிகின்றது.