Categories
தேசிய செய்திகள்

பா.க் ஆக்கிரமிப்பு காஷ்மீர் “தனி தொகுதி வழக்கு” தள்ளுபடி செய்து , அபராதம் விதித்தது உச்சநீதிமன்றம்…!!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை தனி தொகுதியாக அறிவிக்க கோரிய மணவை தள்ளுபடி செய்து ரூ. 50 ஆயிரம் அபராதம் விதித்து உச்சநீதிமன்றம்  உத்தரவிட்டது.

ரா உளவு அமைப்பின் முன்னாள் அதிகாரி ராம் குமார் யாதவ் உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் , பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் மற்றும் கில்கிட் பகுதியை இந்தியாவின் இருநாடாளுமன்ற தொகுதிகளாக அறிவிக்க வேண்டுமென்று தெரிவித்திருந்தார்.

Image result for உச்சநீதிமன்றம்

அந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையில் இன்று விசாரணைக்கு வந்தது. இதில் ,  இது ஒரு பொதுநல மனுவா? நீங்கள் டெல்லியில் வசிக்கிறீர்கள். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீதான ஆர்வம் உங்களுக்கு எதற்கு? இந்த மனுவை விசாரிக்க நாங்கள் விரும்பவில்லை. ராம்குமார் யாதவ் தாக்கல் செய்த பொதுநல மனுவை நியாயப்படுத்த முடியாதது என்று கூறி ரூபாய் 50,000  அபராதம் விதித்து தள்ளுபடி செய்து நீதிபதி உத்தராவிட்டார்.

Categories

Tech |