சுப்ரீம் கோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக உள்ள எஸ்.ஏ.பாப்டே அவர்களின் பதவிக்காலம் வருகின்ற 23ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் அவரைத் தொடர்ந்து அந்தப் பதவிக்கு யார் நியமிக்கப்படுவார் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. பொதுவாக தற்போது பதவியில் இருக்கும் தலைமை நீதிபதி ,தனக்குப்பின் பணியாற்றியுள்ள புதிய தலைமை நீதிபதியின் பெயரை பரிந்துரைப்பது வழக்கமான ஒன்றாகும். அதன்படி எஸ்.ஏ.பாப்டே தனக்குக் கீழ் முதன்மை நீதிபதியாக செயல்படும் என்.வி.ரமணாவை பரிந்துரைத்துள்ளார். தலைமை நீதிபதியின் பரிந்துரையை கேட்டு குடியரசுத் தலைவர்தான் இறுதி முடிவை எடுத்து, அந்தப் பதவிக்கு புதிய தலைமை நீதிபதியை நியமிப்பார்.
இதன்படி பாப்டே பரிந்துரை செய்த என்.வி.ரமணாவின் பெயரை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தனர். இதனால் பாப்டேவின் பரிந்துரையை ஏற்றுக்கொண்டு ,குடியரசுத் தலைவர் என்.வி.ரமணாவை புதிய தலைமை நீதிபதியாக நேற்று நியமித்து உத்தரவிட்டார். அதன்படி ரமணா புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதன்படி அவர் வருகின்ற 24 ஆம் தேதியன்று புதிய தலைமை நீதிபதியாக பதவி ஏற்கிறார். ஆந்திராவில் பிறந்த என்.வி.ரமணா,ஆந்திர ஐகோர்ட்டில் வக்கீலாக பணியாற்றிய வந்தார்.அதன் பிறகு ஆந்திர ஐகோர்ட்டு நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இதை தொடர்ந்து ஆந்திர சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக பதவி வகித்த என்.வி.ரமணா,தற்போது தலைமை நீதிபதியாக பதவியேற்க உள்ளார் .