Categories
மாநில செய்திகள்

சூப்பரோ! சூப்பர்…. புத்தாண்டு, பொங்கலுக்கு ஆவின் சிறப்பு வகை இனிப்புகள்…. வெளியான அசத்தல் தகவல்….!!!!

தமிழக அரசின் கீழ் இயங்கி வரும் முன்னணி பால் நிறுவனமான ஆவின் நிறுவனம் மூலம் பால் மட்டுமின்றி 200க்கும் மேற்பட்ட பால் சம்பந்தப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் புதிதாக 10 பொருட்களை விற்பனை செய்ய ஆவின் நிறுவன அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆவின் நிறுவனத்தின் பால்கோவா, நெய், வெண்ணெய், குல்ஃபி போன்றவை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற பொருட்களாக உள்ளது. அதனை தொடர்ந்து தீபாவளி பண்டிகை முன்னிட்டு ஆவின் நிறுவனம் சார்பில் இனிப்புகள் விற்பனை செய்யப்பட்டது. அதன் மூலம் ரூ.200 கோடி வருவாய் என இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால் விற்பனை முடிவில் ரூ.116 கோடி வருவாய் கிடைத்தது.

இந்த ஆண்டு தீபாவளி இலவச இனிப்புகள் அதிகமாக வழங்கப்பட்டுள்ளதால் வருவாய் ஈட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் புத்தாண்டு மற்றும் பொங்கல் அடுத்தடுத்த பண்டிகைகள் வருகிறது. அதனால் ஆவின் நிறுவனம் சார்பில் இனிப்புகள் விற்பனை செய்வது குறித்து அதிகாரிகள் ஆலோசனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் ஆவின் ஆரஞ்சு பால் பாக்கெட் விலை லிட்டருக்கு ரூ.12 உயர்ந்து இருப்பதால் பால் விற்பனை குறைந்து பால் பவுடர், வெண்ணை தயாரிப்பு அதிகரித்துள்ளது. அதனால் பண்டிகை காலங்களில் சிறப்பு வகை இனிப்புகள் செய்ய திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Categories

Tech |