சுறா மீன்களால் தாக்கப்பட்ட நபரை போலீசார் படகுகள் மற்றும் ஹெலிகாப்டர் மூலம் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஆஸ்திரேலியாவில் உள்ள பெர்த் நகரில் போர்ட் பீச் அமைந்துள்ளது. இந்த கடலில் ஒருவர் நீச்சல் அடித்துக் கொண்டிருந்துள்ளார். அந்த சமயத்தில் இரண்டு சுறாமீன்கள் அவரை தாக்கியுள்ளது. மேலும் இதனை அருகில் இருந்த படகில் உள்ளவர்கள் கவனித்துள்ளனர். உடனே அவர்கள் அந்த நபரிடம் கரைக்கு திரும்பும்படி கூச்சலிட்டுள்ளனர்.
மேலும் கரைக்கு திரும்புவதற்கு முன்பாக அவரை சுறாமீன்கள் தாக்கியது. இதனையடுத்து சுறாமீன்களால் தாக்குதலுக்குள்ளான நபரை படகுகள் மற்றும் ஹெலிகாப்டர் மூலம் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். குறிப்பாக அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவில் சுறா மீன்கள் மனிதர்களை தாக்குவது அதிகமாக நடைபெறுவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.