நியூசிலாந்து புலனாய்வு அதிகாரிகள் அந்நாட்டில் கடந்த 2010ஆம் ஆண்டு பேரழிவை ஏற்படுத்திய சுரங்கம் ஒன்றில் தற்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தின் மூலம் அதனுள் 2 மனித உடல்கள் இருப்பதைக் கண்டறிந்துள்ளார்கள்.
நியூசிலாந்து நாட்டிலுள்ள பைக் நதி சுரங்கத்தில் கடந்த 2010ஆம் ஆண்டு பயங்கர தொடர் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. அவ்வாறு ஏற்பட்ட வெடிப்பில் சுமார் 29 சுரங்கத் தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள். ஆகையினால் பைக் நதி சுரங்கத்திற்குள் எவரும் செல்லக்கூடாது என்று மூடப்பட்டுள்ளது.
இந்நிலையில் மூடப்பட்ட அந்த சுரங்கத்திற்கு செல்ல கடந்த 2019 ஆம் ஆண்டு அனுமதிக்கப்பட்டதையடுத்து தற்போது சுமார் 11 வருடங்களுக்குப் பின்பாக நியூசிலாந்து புலனாய்வு அதிகாரிகள் சுரங்கத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்திலிருந்து முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். அதாவது பைக் நதி சுரங்கத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் 2 மனித உடல்கள் இருப்பது தெரியவந்துள்ளது.