சுரங்கப்பாதையில் பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட நபர் மூச்சுத்திணறி இறந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸின் தெற்கில் அமைந்துள்ள மார்சேல் நகரில் இருக்கும் சுரங்கப்பாதையில் 37 வயதான நபர் ஒருவர் அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகளால் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டார். மேலும் அந்த சுரங்கப்பாதையில் போதிய அளவு ஆக்சிஜன் இல்லாததால் மூச்சு திணறி அங்கேயே அவர் உயிரிழந்துள்ளார். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் அங்கு வருவதற்குள்ளாகவே அவர் இறந்துவிட்டார் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த சம்பவமானது அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது மட்டுமின்றி அதிகாரிகளின் வன்முறைச் செயல்கள், கடுமையான கைது செய்யப்படும் நுட்பங்கள் போன்றவற்றிற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.இந்த சம்பவம் குறித்து மார்சேல் நகர சுரங்கப்பாதை நிறுவனமான RTM தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “ரயிலில் இருந்து இறங்கியதும் வெளியே வருவதற்கு முன்பாகவே அவர் பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் அந்த நபர் பாதுகாப்பு அதிகாரிகளிடம் கோபமாக நடந்து கொண்டதாகவும் அவர்களில் ஒருவரை இவர் தாக்கியுள்ளார்” என்று RTMஇன் தலைமை நிர்வாக அதிகாரியான ஹெர்வே பக்காரியா தெரிவித்துள்ளார். ஆனால் இதற்கு இறந்தவரின் வழக்கறிஞர் கூறியதில் “அவர் சுரங்கப்பாதைக்குள் தான் தடுத்து நிறுத்தப்பட்ட அச்சத்தினால் தான் எதிர்த்து போராடியுள்ளார்” என்று கூறியுள்ளார்.
மேலும் இது குறித்து இறந்தவரின் தாயார் தெரிவித்ததில் “ஏற்கனவே என் மகனுக்கு மனரீதியாக பாதிப்பு இருந்தது. இதனால் அங்கு நடக்கும் விஷயங்களை பற்றி புரிந்து கொள்ள முடியாமலும் தன்னைப்பற்றி தெளிவாக அவர்களிடம் கூற இயலாமலும் அவதிப்பட்டுள்ளார்” என்று தெரிவித்துள்ளார். இது போன்று பல மரணங்கள், வன்முறை செயல்கள் நடந்துள்ள நிலையில் இந்த சம்பவமும் சேர்ந்து மக்களிடையே பலத்த எதிர்ப்பை பெற்றுள்ளது.
குறிப்பாக இந்த ஆண்டின் துவக்கத்தில் தான் Chokehold Arrest Technique என்னும் கழுத்தை நெரித்து கைது செய்யப்படும் நுட்பத்துக்கு பிரெஞ்சு அரசு தடை விதித்துள்ளது. இதற்கு முன்னதாக 2020 ல் செட்ரிக் சோவியத்தில் இதே போன்ற அணுகுமுறையினால் டெலிவரி செய்யும் ஓட்டுனர் ஒருவர் மூச்சுத்திணறி இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவமானது தேசிய அளவில் அனைவரின் பார்வைக்கு சென்றுள்ளது.