Categories
உலக செய்திகள்

“சுரங்கத்தில் விபத்து” உயிருக்குப் போராடும் இருவர்…. 6 பேர் பலி…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

செனெகல் நாட்டில் ஏற்பட்ட சுரங்க வெடிவிபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

மேற்கு ஆப்பிரிக்க கண்டங்களில் ஒன்றான, செனெகல் நாட்டின் தெற்கே உள்ள காசாமன்ஸ் பகுதியில் பல்வேறு சுரங்கங்கள் அமைந்துள்ளது. இந்த சுரங்கங்கள் ஒன்றில் திடீரென பயங்கரமான வெடிகுண்டு வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த வெடிவிபத்தில் சிக்கி 6 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளனர். மேலும் சுரங்க வெடிவிபத்தில் 5 பேர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

தற்போது, காயமடைந்த நபர்களில் 2 பேர் மோசமான நிலையில் தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் வெடிவிபத்து ஏற்பட்ட சுரங்கம் சமீபத்தில் உண்டாக்கிய சுரங்கங்களில் ஒன்றா..? அல்லது அந்நாட்டில் பெய்த கனமழை காரணமாக வெளிவந்த பழைய சுரங்கங்களில் ஒன்றா..? என்பது குறித்த விபரங்கள் ஏதும் சரியாக தெரியவில்லை.

Categories

Tech |