நிலக்கரி சுரங்கத்தில் மண்சரிவு ஏற்பட்டதினால் ராட்சச எந்திரன் சாய்ந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் நெய்வேலியில் என்.எல்.சி நிறுவனம் இயங்கி வருகின்றது. இங்கு இருக்கின்ற 3 சுரங்கங்களிலிருந்து வெட்டப்படும் நிலக்கரியை கொண்டு அனல்மின் நிலையங்களில் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் நிறுவனத்தின் தேவைக்கு போக நிலக்கரியும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதனையடுத்து சுரங்கங்களில் நிலக்கரி எடுக்க மேல் மண் எடுக்கும் பணியின் போது சேகரிக்கப்படும் மண்ணை ஏற்கனவே நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்ட இடங்களுக்கு கொண்டு நிரப்ப சுரங்க பகுதிகளில் ராட்சச இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
அப்போது இரண்டாவது சுரங்கத்தில் முதற்கட்ட பணியின் போது நிலக்கரி வெட்டும் பணி நடைபெற்றுள்ளது. இந்த பணியில் சுரங்க மண்ணை ராட்சச எந்திரத்தின் மூலம் ஏற்கனவே நிலக்கரி வெட்டப்பட்ட பகுதிக்கு கொண்டு சென்று கொட்டும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். ஆனால் திடீரென மண் கொட்டும் ராட்சச எயந்திரம் ஒரு பகுதியில் சரிந்து விழுந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் மற்றும் அதிகாரிகள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.
அதனால் இந்த விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதனை அடுத்து விபத்து ஏற்பட்டதினால் சுரங்க பகுதிகளில் நிலக்கரி வெட்டும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. பின்னர் இயந்திரத்தில் ஏற்பட்ட சேதங்களின் இழப்பீடு எவ்வளவு இருக்குமெனவும், விபத்துக்கான காரணம் குறித்தும் உயர்மட்ட அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். இது பற்றி நிர்வாகம் கூறும் போது விபத்து ஏற்பட்ட இயந்திரம் 2,000 டன் எடை கொண்டது. இந்த இயந்திரம் இருந்த பகுதியில் திடீரென மண் சரிந்து விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து விபத்துக்குள்ளான எயந்திரத்தை சீரமைத்து எதிர்காலத்தில் விபத்துக்கள் எதுவும் நடக்காத வண்ணம் சரியான திட்டமிடுதலுடன் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என என்.எல்.சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.