Categories
அரசியல் மாநில செய்திகள்

“தமிழக அரசு தான் பதில் சொல்லணும்!”…. சூரப்பாவை சுத்தில் விடும் கோர்ட்…. வெளியான அதிரடி உத்தரவு….!!!!

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா பணி காலத்தின் போது முறைகேடுகள் செய்ததாக கூறி குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது தமிழக ஆளுநர் தான் சூரப்பா விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுப்பது ? என்பது குறித்து முடிவெடுக்க வேண்டும் என்றும், ஆளுநருக்கு அதற்கான ஆணையத்தின் அறிக்கையை அனுப்ப உள்ளதாகவும் தமிழக அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து நேற்று மீண்டும் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது சூரப்பா தரப்பினர் “ஆணையத்தின் அறிக்கை நகலை தங்களுக்கு வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும். அதன் பிறகு அதற்குரிய விளக்கத்தை ஆளுநருக்கு அனுப்பலாம்” என்று கூறினர். இந்நிலையில் நீதிபதி பார்த்திபன், சூரப்பாவிற்கு விசாரணை ஆணையத்தின் அறிக்கை நகலை வழங்கலாமா ? என்பது குறித்து தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். அதேபோல் வழக்கு விசாரணையை திங்கட்கிழமைக்கு ஒத்தி வைப்பதாகவும் நீதிபதி கூறினார்.

Categories

Tech |