Categories
கிரிக்கெட் விளையாட்டு

சுரேஷ் ரெய்னா மற்றும் சாம் கரனின் …அதிரடி ஆட்டம் …சிஎஸ்கே 188 ரன்கள் குவிப்பு …!!!

சிஎஸ்கே அணியின் சுரேஷ் ரெய்னா மற்றும் சாம் கரன் ,ஆகிய இருவரின் அதிரடியான ஆட்டத்தால், 188 ரன்களை சிஎஸ்கே அணி எடுத்துள்ளது.

2021  ஐபிஎல் சீசனுக்கான முதல் கிரிக்கெட்  போட்டி திருவிழாவானது, நேற்று சென்னையில் தொடங்கியது. இன்று மும்பையில் நடக்கும் 2வது லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே- டெல்லி கேப்பிடல்ஸ்  அணிகள்  மோதுகின்றன. முதலில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. இதன்படி சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங்கில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான டு பிளசிஸும்- ருதுராஜ் கெய்க்வாட் ஜோடி களமிறங்கியது. ஆனால் சிஎஸ்கே அணி தொடக்க ஆட்டத்திலேயே சரிவை சந்தித்தது. டு பிளசிஸ்  எல்.பி.டபிள்யூ முறையில் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து ருதுராஜும் 5 ரன்களை எடுத்து வெளியேறினார்.

இதனால் சிஎஸ்கே அணி 7 ரன்களில் 2 விக்கெட்டுகளை எடுத்தது.அடுத்ததாக  ஆட்டத்தில் களமிறங்கிய மொயீன் அலி – சுரேஷ் ரெய்னா ஜோடி நிதானமாக ஆட்டத்தை வெளிப்படுத்தினர். மொயின் அலி 24 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்ததாக அம்பத்தி ராயுடு களமிறங்கி ஓரளவு விளையாடினார். மறுமுனையில் சுரேஷ் ரெய்னா தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். அவர் 36 பந்துகளில் 3 பவுண்டரி, 4 சிக்சர்கள் அடித்து விளாசினார். 54 ரன்களில் அரைசதம் அடித்த சுரேஷ்ரெய்னா ரன் அவுட் மூலம் அவுட்டானார். ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த கேப்டன் டோனியின் பேட்டிங் சிறப்பாக அமையவில்லை.

அவர் ரன்கள் எதுவும் எடுக்காமல் போல்ட் ஆகி வெளியேறினார். கடைசி ஓவரில் களமிறங்கிய சாம் கரன் மற்றும் ஜடேஜா இருவரும் அதிரடி ஆட்டத்தை காட்டினர். இதில் குறிப்பாக சாம் கரன்  டெல்லி அணியின் பவுலிங்கை துவம்சம் செய்தார். சாம் கரன்  15 பந்துகளில் 34 ரன்களை எடுத்து கடைசி பந்தில் அவுட் ஆனார். ஜடேஜா இறுதிவரை ஆட்டமிழக்காமல்  26 ரன்களை எடுத்தார். இதனால் சிஎஸ்கே 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்களை குவித்துள்ளது. இதன்பிறகு களமிறங்கியுள்ள டெல்லி கேப்பிடல்ஸ்  அணி  189 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு பேட்டிங் செய்து வருகிறது.

Categories

Tech |