அமெரிக்காவில் அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப் போட்டிக்கான தொடர் தொடங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள ஹவாய் மாகாணத்தில் ஒவ்வொரு வருடமும் வழக்கமாக அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப் தொடர் நடைபெறும். இதில் வீரர்கள் பசிபிக் பெருங்கடலில் உள்ள மிகப்பெரிய அலைகளில் சாகசம் செய்து அசத்துவார்கள்.
அதன்படி இந்த வருடம் நடக்கும் அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப் தொடரில் பல நாடுகளிலிருந்து வந்த வீரர்கள் பங்கேற்றிருக்கிறார்கள். வரும் பிப்ரவரி 10ஆம் தேதி வரை பல சுற்றுகள் இத்தொடரில் நடக்கவிருக்கிறது.