Categories
உலக செய்திகள்

தேசியக் கொடியுடன் நீர் சறுக்கு.. முகநூல் நிறுவனத்தின் CEO வெளியிட்ட வீடியோ..!!

அமெரிக்க நாட்டின் சுதந்திர தினத்தன்று முகநூல் நிறுவனத்தின் CEO மார்க் ஜூக்கர்பெர்க் தேசிய கொடியை வைத்துக் கொண்டு நீர் சறுக்கு செய்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் சுதந்திர தினம் ஜூலை 4 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் அமெரிக்காவின் 245 ஆவது சுதந்திர தினம். எனவே அமெரிக்க மக்கள் நேற்று சுதந்திர தினத்தை வாணவேடிக்கைகள் நிகழ்த்தி மகிழ்வுடன் கொண்டாடினார்கள். இந்நிலையில் முகநூல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான மார்க் ஜூகர்பெர்க் நாட்டின் தேசிய கொடியை வைத்துக் கொண்டு நீர் சறுக்கு செய்துள்ளார்.

https://www.instagram.com/tv/CQ6u_nFnGmR/

இந்த வீடியோ இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. சர்ஃபிங் போர்டில் நாட்டின் தேசிய கொடியை கைகளை பிடித்தவாறு அலைகளில் முன்னோக்கி அவர் செல்லும் வீடியோவை மார்க் ஜூக்கர்பெர்க் அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

Categories

Tech |