Categories
சினிமா தமிழ் சினிமா

“அறுவை சிகிச்சை முடிந்தது”… அப்பா “நலமுடன் இருக்கிறார்”… மகள்கள் வெளியிட்ட அறிக்கை..!!

நடிகர் கமல்ஹாசனின் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததாகவும், அவர் நலமுடன் இருப்பதாகவும் அவரது மகள்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு நடந்த சிறு விபத்தின் காரணமாக நடிகர் கமலஹாசனின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் அவரது காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனிடையே பிக்பாஸ் மற்றும் கட்சிப் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளில் தொடர்ந்து கவனம் செலுத்தி வந்ததால் கடந்த இரு தினங்களுக்கு முன்பு அவரது காலில் திடீரென்று வலி ஏற்பட்டதாகவும், இதனால் மீண்டும் ஒரு சிறு அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருப்பதாகவும் கமல்ஹாசன் அறிக்கை விட்டிருந்தார்.

அவர் விரைவில் மீண்டு வர ரசிகர்கள் மற்றும் மக்கள் நீதி மைய கட்சித் தொண்டர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில் கமல்ஹாசனின் காலில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்ததாக அவரது மகள்கள் இருவரும் கூறியுள்ளனர். இன்று காலை ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் எங்களது அப்பாவிற்கு காலில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்தது. அப்ப நலமுடன் இருக்கிறார். அப்பாவை மருத்துவர்களும், மருத்துவ பணியாளர்களும், மருத்துவமனை நிர்வாகமும் நல்ல முறையில் பார்த்துக்கொண்டது. 4,5 நாட்களுக்கு பிறகு அவர் வீடு திரும்புவார். சில நாட்களுக்குப்பின் மீண்டும் கட்சி பணிகளை தொடங்குவார் என்று அவரது மகள்கள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |