பிரபல தொகுப்பாளினி மூளைக்கருகில் அறுவை சிகிச்சை செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சன் டிவி, விஜய் டிவி, ஜீ தொலைக்காட்சி என முன்னணி தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி ரசிகர்கள் மத்தியில் தனக்கென பெரும் ஆதரவை பெற்றிருப்பவர் தொகுப்பாளினி அர்ச்சனா. மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் இவருக்கென்று மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உருவாகி விட்டது.
இதை தொடர்ந்து இவர் தற்போது விஜய் டிவியில் Mr & Mrs சின்னத்திரை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் தொகுப்பாளினி அர்ச்சனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு அதிர்ச்சியான தகவலை பதிவு செய்துள்ளார்.
அதில், அவருக்கு மூளை பக்கத்தில் ஒரு சிறிய பிரச்சினை இருப்பதாகவும், அதனால் தான் அறுவை சிகிச்சை செய்ய இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அவர் சிகிச்சைக்குப் பின் எப்படி இருக்கிறார் என்பதை தன் மகள் அறிவிப்பால் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
https://www.instagram.com/p/CRIQf3qF1t1/