சர்ஜிகல் ஸ்டரைக் பாலக்கோடு முகாம் மீது இந்தியா தாக்குதல். பாகிஸ்தான் மீது போர் இல்லை அவர்கள் செய்ய தவறியதை நாம் செய்தோம் இந்திய வெளியுறவுத்துறை செயலர் விஜய் கோகலே விளக்கம். இந்தியா பலமுறை பாகிஸ்தானிடம் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டது. ஆனால் பாகிஸ்தான் அந்த அமைப்பின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பாகிஸ்தானில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் மிகப்பெரிய பயங்கரவாத பயிற்சி முகாம் பாலக்கோட்டில் உள்ளது.
அதனை ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர் மௌலானா மசூத் ஆசாத் உறவினர் மௌலானா யூசுப் அசார் நடத்தி வருகிறார். கடந்த இரு தலைமுறைகளாக பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு அந்நாட்டு பஞ்சாப் மாகாணத்தில் உள்ள பகவால்பூரிலிருந்து செயல்பட்டு வருகின்றது. இந்த அமைப்பு தான் கடந்த 2001ஆம் வருட தொடர் தாக்குதல்களுக்கும் நாடாளுமன்றத்தின் மீதான தாக்குதல்களும் 2016 ஜனவரி பதான் போரில் நடந்த தாக்குதலுக்கும் காரணமான அமைப்பு. புல்வாமா தற்கொலைப்படை தாக்குதளுக்கும் இந்த அமைப்பே காரணம்.
எனவேதான் பாலக்கோட் தீவிரவாத முகாம் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. இந்திய விமான தாக்குதலில் ஜெய்ஷ் அமைப்பின் கட்டுப்பாட்டு அறை அழிந்தது. பாகிஸ்தான் தீவிரவாதிகளின் முகாம் மீது ஆயிரம் கிலோ வெடி குண்டை இந்திய விமானப்படை வீசி முகாமை அளித்தது. ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தினர் காஷ்மீரில் பதற்றமான சூழ்நிலைகளை உருவாக்கினர். சர்ஜிகல் ஸ்ட்ரைக் பதிலடியாக பாகிஸ்தான் இந்திய ராணுவத்தின் இரண்டு விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக கூறியிருக்கிறது.
அதில் ஒரு விமானப்படை விமானியான அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றொருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டார். அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்தினரால் எந்தவித இடையூறுமின்றி பத்திரமாக இருப்பதாக தரும் வீடியோக்களில் தெரிந்துள்ளது. இந்திய ராணுவ விமானி அபிநந்தன் சென்னைவாசி. இவர் பாகிஸ்தான் பிடியில் இருந்தும் தைரியமாக இந்திய ராணுவ ரகசியங்களை தெரிவிக்க மாட்டேன் என்று சொல்லும் காட்சி வீடியோக்களில் நம் நெஞ்சை நிமிர்த்தி சல்யூட் சொல்ல வைக்கிறது.