பிரபல காமெடி நடிகர் சூரி நாயகனாக நடித்து வரும் புதிய படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவர் தற்போது சூரி நாயகனாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக நடிகை பவானி ஸ்ரீ நடித்து வருகிறார். மேலும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
எல்ரெட் குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்திற்கு ‘விடுதலை’ என பெயரிடப்பட்டுள்ளது. தற்போது தமிழில் தயாராகி வரும் இப்படத்தினை பல மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
Here it is @VetriMaaran ‘s #Viduthalai first look posters.#Ilaiyaraja @sooriofficial @elredkumar @rsinfotainment @VelrajR @mani_rsinfo @DoneChannel1 @CtcMediaboy pic.twitter.com/DxfKG1Lv9m
— VijaySethupathi (@VijaySethuOffl) April 22, 2021