தற்போது வெற்றிமாறன் சூரி கதாநாயகனாக நடிக்கும் “விடுதலை” திரைப்படத்தை இயக்கி வருகிறார். எழுத்தாளர் ஜெய மோகனின் துணைவன் என்ற சிறு கதையயை மையமாக கொண்டு இந்த படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இளையராஜா இசை அமைக்கும் இத்திரைப்படத்தை ஆர்.எஸ் இன்போடெயின்மென்ட் சார்பாக எல்ரெட் குமார் தயாரிக்கிறார்.
இத்திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், விடுதலை படப்பிடிப்பு தளத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சூரி தன் சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். அவற்றில் ஸ்டுடியோ இல்ல.. உண்மையான காடு என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
Not a studio… A real jungle #Viduthalai
Viduthalai Shooting spot pic.twitter.com/o9vPNEDWtg
— Actor Soori (@sooriofficial) December 19, 2022