Categories
சினிமா தமிழ் சினிமா

சூரியின் ‘விடுதலை’ …. ஐந்து மொழிகளில் ரிலீஸ் செய்ய திட்டம்…. எகிறும் எதிர்பார்ப்பு…!!!

சூரி நாயகனாக நடிக்கும் விடுதலை திரைப்படத்தை ஐந்து மொழிகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் சூரி. இவர் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘விடுதலை’ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார். சூரி போலீஸ் அதிகாரியாக நடிக்கும் இப்படத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

ஆகையால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்நிலையில் தமிழில் உருவாகி வரும் விடுதலை திரைப்படத்தை தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளிலும் வெளியிட படக்குழு திட்டமிட்டு உள்ளதாக தெரியவந்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கூறிய விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |