Categories
சினிமா தமிழ் சினிமா

‘அருவா’ படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க ரெடி… ஓகே சொன்ன நடிகை இவர்தான்!

சூர்யா மற்றும் ஹரி கூட்டணியில் உருவாகிவரும் ‘அருவா’ படத்தில் இளம் கதாநாயகியான பூஜா ஹெக்டே நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் ‘சூரரைப் போற்று’ திரைப்படம் தற்போது ரிலீஸுக்குத் தயாராக இருக்கிறது. இதையடுத்து அவர் 6-ஆவது முறையாக ஹரி இயக்கத்தில் உருவாகவுள்ள  ‘அருவா’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.இந்த படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்கும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கொரோனா வைரசால் படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

Happy Birthday Pooja Hegde: 10 Instagram pictures of the actress ...

இந்நிலையில் இயக்குநர் ஹரி தற்போது இப்படத்தில் யாரையெல்லாம் நடிக்கவைக்கலாம் என நடிகர், நடிகைகளைத் தேர்வுசெய்யும் பணிகளில் ரொம்ப பிஸியாக இருக்கிறார். அந்தவகையில், படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக யாரை நடிக்கவைக்கலாம் என யோசித்த படக்குழு, தற்போது நடிகை பூஜா ஹெக்டேவை அணுகியுள்ளது. அவரும் கதையை கேட்டுவிட்டு, நடிக்க சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

Ala' doesn't objectify my legs: Pooja Hegde | ala doesnt objectify ...

ஏற்கனவே நடிகர் சூர்யா ஹரி இயக்கத்தில் ஆறு, வேல், சிங்கம், சிங்கம் 2, சிங்கம் 3 ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது நினைவுகூரத்தக்கது.

Categories

Tech |