Categories
சினிமா தமிழ் சினிமா

விநியோகஸ்தர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த சூர்யா.. அடுத்தடுத்து 4 படங்கள் ஓடிடி தளத்தில் ரிலீஸ்..!!

நடிகர் சூர்யாவின் சொந்த பட நிறுவனமான 2d நிறுவனம் தயாரித்த 4 திரைப்படங்களும் ஓடிடி தளத்தில் வெளியிட ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதால் விநியோகஸ்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கொரோனா தொற்று தற்போது அதிகரித்து வருவதால், திரையரங்குகள் திறக்கப்படவில்லை. எனவே சிறிய பட்ஜெட் முதல் பெரிய பட்ஜெட் படங்கள் வரை ஓடிடி தளத்தில் வெளியிடப்படுகிறது. எனினும் சில திரைப்படங்கள் திரையரங்கில் வெளியிடுவதற்காக காத்திருக்கிறது.

இந்நிலையில், தயாரிப்பாளர்கள் பலரும் ஓடிடி தளத்திற்கு மாறி வருகிறார்கள். அந்த வரிசையில் நடிகர் சூர்யா, தன் சொந்த பட தயாரிப்பு நிறுவனமான 2டி நிறுவனத்தில் தயாரித்த நான்கு படங்களையும், அமேசான் தளத்தில் அடுத்தடுத்த மாதங்களில் வெளியிடுவதற்கு ஒப்பந்தம் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இயக்குனர் அரிசில் மூர்த்தியின் ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் திரைப்படம், இரா.சரவணன் இயக்கத்தில் சசிகுமார், ஜோதிகா நடித்துள்ள உடன்பிறப்பே திரைப்படம், தா.செ.ஞானவேல் இயக்கத்தில், சூர்யா நடித்த ஜெய்பீம் திரைப்படம்,  நடிகர் அருண் விஜய் மற்றும் அவரின் மகன் அர்னவ் விஜய் நடித்திருக்கும் ஓ மை டாக் திரைப்படம், போன்ற 4 திரைப்படங்களையும் அமேசான் பிரைமில் வெளியிட சூர்யா ஒப்பந்தம் செய்திருக்கிறார்.

ஒரே நேரத்தில், சூர்யா 4 படங்களையும், ஓடிடி தளத்தில் வெளியிட முடிவெடுத்ததால், விநியோகஸ்தர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதற்கு முன் நடிகர் சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படமும் ஓடிடி தளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |