சூர்யா மேடையில் விருது வாங்கும்பொழுது ஜோதிகா செய்த செயலின் வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.
இந்திய அரசு சார்பாக வருடந்தோறும் திரைத்துறை மற்றும் திரை கலைஞர்களுக்கு தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றது. சென்ற 2020-ம் வருடத்திற்கான 68-வது தேசிய விருது பட்டியலானது சென்ற சில மாதங்களுக்கு முன்பாக அறிவிக்கப்பட்டதில் சூர்யா நடிப்பில் வெளிவந்த சூரரை போற்று படத்திற்கு 5 விருதுகளும் மண்டேலா திரைப்படத்திற்கு இரண்டு விருதுகளும் மற்ற திரைப்படத்திற்கு மூன்று விருதுகளும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் சென்ற 2020 ஆம் வருடம் வெளிவந்த சூரரைப் போற்று திரைப்படத்தில் நடித்த சூர்யாவிற்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதை குடியரசு தலைவர் திரௌபதி வழங்கினார். அப்போது ஜோதிகா கீழே அமர்ந்து செல்போனில் போட்டோ எடுத்திருக்கிறார். இதன் பின்னர் சிறந்த திரைப்படத்திற்கான விருதை சூரரை போற்று திரைப்படத்திற்காக தயாரிப்பாளர் ஜோதிகா பெற்றுக்கொண்டார். அதை சூர்யா கீழே இருந்து செல்போனில் போட்டோ எடுத்திருக்கிறார். இந்த வீடியோவானது தற்போது வைரலாகி வருகின்றது.
Finally 🤩😭 @Suriya_offl Congrats Thalaivaa !!!! #NationalAwards #SooraraiPottru pic.twitter.com/7OSW9CwDLD
— Suriya Fans Rage (𝕏) (@SuriyaFansRages) September 30, 2022