Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

அதிகார அத்துமீறல் முடிவுக்கு வர வேண்டும் – நடிகர் சூர்யா கண்டனம் …!!

சாத்தான்குளம் இரட்டை படுகொலை சம்பவத்தை கண்டித்து நடிகர் சூர்யா கண்டன  வெளியிட்டுள்ளார்.

சாத்தான்குளத்தில்  செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ், பெண்ணிக்ஸ் மரணம் நாடு முழுவதும் பேசுபொருள் ஆகி வருகிறது. இந்த மரண சம்பவத்தை கண்டித்து சினிமா, விளையாட்டு என பிரபலங்கள் பலரும் கண்டன குரல் எழுப்பி வருகின்றனர். தமிழகத்திலும் பல்வேறு பிரபலங்கள் தங்களது கருத்தை தெரிவித்திருந்த நிலையில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் சூர்யா கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில்,

கோவில்பட்டியில் நிகழ்ந்த லாக்கப் அத்துமீறல் காவல்துறையின் மாண்பை  குறைக்கும் செயல். இது ஏதோ ஒரு இடத்தில் தவறி நடந்த சம்பவம் என்று கடந்து செல்ல முடியாது. தங்கள் மரணத்தின் மூலம் தந்தை, மகன் இருவரும் இந்த சமூகத்தின் மனசாட்சியை உலுக்கி உள்ளார்கள். கொடூர மரணத்தில் கடமை தவறிய அனைவருக்கும் நீதியின் முன் நிறுத்தி தண்டிக்கபட வேண்டும்.

கொரோனா யுத்த களத்தில் முன் வரிசையில் நிற்கும் நின்று பணியாற்றும் காவல்துறைக்கு தலைவணங்குகிறேன். அதிகாரத்தை மக்களுக்கு எதிராக பயன்படுத்தும் காவல்துறையினருக்கு எனது கடும் கண்டனம் என நடிகர் சூர்யா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Categories

Tech |