Categories
மாநில செய்திகள்

80 அடி ஆழத்திற்கு சென்ற சுர்ஜித்……. மீட்பு பணியில் தீவிரம் காட்டும் NDRF…..!!

குழந்தை சுர்ஜித் 80 அடி ஆழத்தில் சிக்கி கொண்டதால் குழந்ந்தையை காப்பதற்கான தீவிர முயற்சியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியில் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த இரண்டு வயது குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளான். இதையடுத்து முதலில் 26 அடியில் சிக்கியிருந்த அவனை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த மீட்பு குழுவினர் 20 மணி நேரமாக மீட்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். பின் 33 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு குழு அவர்களோடு கைகோர்த்து மீட்பு பணியில் ஈடுபட்டு வந்தது.

Image result for 80 அடி ஆழத்தில் சுர்ஜித்

முதலில் 26 அடியிலிருந்து 70 அடிக்கு சென்ற சுர்ஜித்,தற்போது மேலும் 10 அடி சென்று 80 அடி ஆழத்தில் சிக்கிக்கொண்டது. இந்நிலையில் 80 அடி ஆழத்தில் தண்ணீர் ஊற்று எடுத்து வருவதால் குழந்தை மேன்மேலும் மூச்சுத் திணறலுக்கு ஆளாகி வருகிறது. இதனால் தேசிய பேரிடர் மீட்பு குழு நவீன கருவிகளைக் கொண்டு தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றது. விரைவில் குழந்தை சுஜித் நலமுடன் மீட்கப்படுவான் என்ற நம்பிக்கையும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |