Categories
மாநில செய்திகள்

மேட்டூர் அணையில் வீணாக கடலில் கலக்கும் உபரி நீர்….. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு….. கோர்ட் அதிரடி….!!!!!

தமிழகத்தில் வருடம் தோறும் பருவமழை காலத்தின் போது மேட்டூர் அணையில் இருந்து உபநீர் திறந்து விடப்படும். இந்த உபரி நீரானது வீணாக கடலில் கலக்கிறது. இதனால் திறந்து விடப்படும் உபரி நீரை ராட்சஷ குழாய்கள் மூலம் சேலம் கிழக்கு பகுதியில் உள்ள பகுதிகளுக்கு திருப்பி விட்டால் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். அதன்படி கெங்கவல்லி, பெத்தநாயக்கன் பாளையம், தலைவாசல், வாழப்பாடி மற்றும் ஆத்தூர் போன்ற பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெரும் வகையில் வசிஷ்ட நதி, சுவேதா நதி மற்றும் ஏரி குளங்களுக்கு ராட்சச குழாய்கள் மூலம் தண்ணீரை திருப்பி விட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த பொதுநல வழக்கு மனுவை புலியங்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர்‌‌ என். பெருமாள் தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் ஊராட்சி மன்ற தலைவர் தாக்கல் செய்த பொதுநல வழக்கு தொடர்பான மனு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் மழையை நம்பி சேலம் மாவட்டத்தில் பல்வேறு விவசாயிகள் இருப்பதால் மழை நேரத்தில் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் வீணாக கடலில் கலக்காதவாறு ஆறு மற்றும் குளங்களில் சேமித்து வைத்தால் கோடை காலங்களில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்பட்டது. இது தொடர்பான நடவடிக்கையை எடுப்பதற்கு அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தமிழக அரசு 4 வார காலத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்துள்ளார்.

Categories

Tech |