எல்லையில் பார்வையிட்டு, ஆய்வு செய்யும் பிரதமர் நரேந்திர மோடி அவசர ஆலோசனை கூட்டத்தை நடத்த இருக்கின்றார் என்று தெரியவந்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி இன்று இந்தியா – சீனா எல்லை பகுதியான லடாக்கிற்கு சென்றார். எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் பிரதமர் மோடி அங்கு சென்று அங்குள்ள பல்வேறு இடங்களில் இந்திய ராணுவத்தை சேர்ந்த மூத்த அதிகாரிகள், விமானப்படை வீரர்கள் இந்தோ – திபெத் எல்லை அதிகாரிகள் மற்றும் வீரர்கள் ஆகியோரை சந்தித்தார். லே என்கின்ற இடத்தில் தற்போது கள நிலவரம் என்ன ? இந்திய வீரர்கள் – சீன ராணுவ வீரர்களுடன் மோதிக் கொண்ட பிறகு தற்போது என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன ? போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து அவருக்கு விவரமாக விளக்கப்பட்டிருக்கிறது.
லே பகுதியில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று காயமடைந்த வீரர்களை சந்திப்பார் என்றும், இதை தவிர அங்கு உள்ள உள்ள இடங்களில் தயார் நிலை எப்படி இருக்கிறது ? கண்காணிப்பு எப்படி இருக்கிறது ? போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து கேட்டறிந்தார் என்று தெரிகிறது. அவருடன் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் ராணுவ தளபதியும் உடனிருக்கின்றார்கள். இவர்களை பிரதமருடன் பல்வேறு இடங்களுக்கு சென்று, அங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருபவர்களுக்கும் உற்சாகத்தை அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்த பிரதமரின் பயணம் தற்போது லடாக் பகுதியில் பல்வேறு இடங்களில் தொடர்ந்துகொண்டிருக்கிறது. முன்னதாக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அங்கு செல்வதாக இருந்தது. ஆனால் ராஜ்நாத் சிங் செல்லவில்லை. அவருக்கு பதிலாக பிரதமர் நரேந்திர மோடியே நேரடியாக சென்று பார்வையிடுகிறார். பிரதமர் மோடி திரும்பி வந்த பிறகு கேபினட்டில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டத்தை நடத்த இருக்கிறார். இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிர்மலா சீதாராமன் மற்றும் தேசிய பாதுகாப்பு செயலாளர் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள் என்று தெரிகின்றது.