அமெரிக்க ராணுவ படைகள், ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து வெளியேறி வருவதால், நாட்டில் தலீபான்கள் மீண்டும் தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
ஆப்கானிஸ்தானில் அரசபடை மற்றும் தலிபான் தீவிரவாதிகளுக்கு இடையே பல வருடங்களாக மோதல் ஏற்பட்டு வருகிறது. எனவே அரச படையினருக்கு ஆதரவாக அமெரிக்கா தங்கள் படைகளை ஆப்கானிஸ்தானில் களமிறக்கியது. அங்கு சுமார் 20 வருடங்களாக அமெரிக்க படைகள் இயங்கி வந்தது.
எனினும் இந்த போரை முடிவு கட்ட அமெரிக்கா மற்றும் தலீபான்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதில், ஆப்கானிஸ்தான் அரசுடன் தலீபான்கள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் அமெரிக்க படைகள் நாட்டிலிருந்து வெளியேறும் போது தாக்குதலில் ஈடுபடக்கூடாது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
This purported video shows dozens Afghan army soldiers surrender including provincial commander of Afghan forces in Badghis Khawaja Murad to Taliban, the first province fall to Taliban #Afghanistan https://t.co/OpdQ1XVFGo
— The South Asia Times (@thesouthasiatim) July 7, 2021
எனவே, ஆப்கானிஸ்தானிலிருக்கும் தங்கள் படைகளை வரும் செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதிக்குள் வெளியேற்ற அமெரிக்கா தீர்மானித்தது. எனவே நாட்டிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட, தலீபான்கள் மீண்டும் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அமெரிக்க படை கைவிட்ட படைத்தளங்களை தலீபான்கள் கைப்பற்றுகிறார்கள். மேலும் நாட்டிலும் தாக்குதல் நடத்த தொடங்கிவிட்டனர். எனவே நாட்டின் ராணுவ வீரர்கள் பலர் பக்கத்து நாடான தஜகஸ்தானுக்கு சென்றுவிட்டனர். மேலும் ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு படை வீரர்களும் தலீபான் தீவிரவாதிகளிடம், தங்களின் ஆயுதங்களை கொடுத்துவிட்டு சரணடைந்து வருகிறார்கள். தற்போது இந்த வீடியோ இணையதளங்களில் பரவி வருகிறது.