சென்னையில் நேற்று தமிழக சுகாதாரத்துறையின் மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளின் நிலை, அரசு மருத்துவமனைகளில் மருந்து, மாத்திரைகள் கையிருப்பு, காய்ச்சல் முகாம்களின் செயல்பாடுகள், பருவகால மழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போன்றவைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதற்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். இந்த ஆலோசனை கூட்டம் முடிவடைந்த பிறகு அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது நயன்தாரா-விக்னேஷ் சிவனின் இரட்டை குழந்தை விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அமைச்சர் நயன்தாரா-விக்னேஷ் சிவன் குழந்தை விவகாரம் தொடர்பாக துறை அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது என்றார். அதன் பிறகு நயன்தாரா-விக்னேஷ் சிவன் குழந்தை பெற்றெடுத்தது தொடர்பாக விரிவான அறிக்கை தயார் செய்வதற்கு ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அறிக்கை வந்த பிறகு வாடகை தாய் சட்டத்தை மீறி நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதியினர் குழந்தை பெற்று எடுத்தார்களா என்பது குறித்து அவர்களிடம் நேரில் விசாரணை நடத்தப்படும் என்று கூறினார்.