Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் கொரோனா தொற்று ஏற்பட்ட 6 மண்டலங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது – மாநகராட்சி ஆணையர்!

சென்னையில் கொரோனா தொற்று ஏற்பட்ட 6 மண்டலங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையர் கூறியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2,058ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் நேற்று ஒரே நாளில் 103 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 673ஆக உயர்ந்துள்ளது.தமிழகத்திலேயே சென்னையில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் சென்னையில் மேற்கொள்ளும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பேட்டியளித்தார்.

அப்போது, சென்னையில் பரிசோதனைகளை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், சென்னையில் கொரோனோ பரிசோதனையை 2 ஆயிரம் வரை அதிகரித்து மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். பிறமாவட்டங்களை ஒப்பிடும்போது சென்னையில் மக்கள் அதிகம்; இதுவரை 22,000 பேருக்கு சோதனை முடிந்துள்ளது என கூறியுள்ளார். நகரில் கூடுதலாக 100 கிருமி நாசினி தெளிப்பான்கள் பயன்படுத்தப்படுகின்றனர்.

சமூக விலகலை கடைபிடிப்பதை கடுமையாக உள்ளோம். கொரோனா தொற்று ஏற்பட்ட 6 மண்டலங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என கூறியுள்ளார். பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்படும் பகுதிகளில் உள்ள மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்படும். கோயம்பேடு வணிக வளாகத்தில் மொத்தம் வியாபாரிகளுக்கு மட்டுமே அனுமதி, சில்லறை வியாபாரிகளுக்கு அனுமதி இல்லை என்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்காத நிறுவனங்களுக்கு 3 மாதங்களுக்கு சீல் வைக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

Categories

Tech |