Categories
தேசிய செய்திகள்

போடு வேற லெவல்…! சீனா பாகிஸ்தான் எல்லைகளை கண்காணிக்க…. மத்திய அரசு செம திட்டம்….!!!

இந்திய ராணுவத்தின் எல்லைகளை செயற்கைகோள்கள் மூலம் கண்காணிக்க  ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகம் இந்திய ராணுவத்தின் எல்லை பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் திறனை மேம்படுத்துவதற்காக, தனி செயற்கைக்கோள்கள் மூலம் எல்லை கண்காணிக்கும் திட்டத்திற்கு ரூபாய் 4000 கோடி மதிப்பீட்டில் ஒப்புதல் அளித்துள்ளது.

இது தொடர்பாக பாதுகாப்பு துறை அமைச்சகம் வட்டாரங்கள் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது, அதில் “பாதுகாப்பு அமைச்சகத்துடன் இணைந்து எல்லைகளை கண்காணிக்க உருவாக்கப்பட்டுள்ள ஜிசாட் 7பி செயற்கைக் கோள் திட்டத்திற்கான பணிகளில் இஸ்ரோவும் செயல்ப்படும் .

இதற்கிடையில் இந்தியக் கடற்படை மற்றும் விமானப்படைகளுக்கு தனிப்பட்ட செயற்கைகோள்கள் உள்ளன. இந்த  நிலையில் இந்திய ராணுவத்தின் தனித்துவ பயன்பாட்டிற்காக  உருவாக்கப்பட்ட இந்த செயற்கைக்கோள் மூலம் பாகிஸ்தான் மற்றும் சீன எல்லைகள் பாதுகாப்பை பலப்படுத்த உதவும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |