இந்தியாவில் புலிகள் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக கணக்கிட்டு விவரம் வெளியிடப்பட்டது.
இந்தியாவில் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை புலிகள் கணக்கெடுப்பு நடைபெறும். இந்நிலையில் சர்வதேச புலிகள் தினத்தையொட்டி 2018-ன் புலிகள் கணக்கெடுப்பு விவரத்தை டெல்லியில் மோடி வெளியிட்டுள்ளார். இதில் கடந்த 2014-ம் ஆண்டு புலிகள் கணக்கெடுப்பின் போது இந்தியாவில் 2226 புலிகள் இருந்ததை விட தற்போது 2967 புலிகள் அதிகமாக உள்ளது.
கணக்கெடுப்பு விவரத்தை வெளிட்டப்பின் பேசிய பிரதமர் மோடி 2022 ஆம் ஆண்டிற்குள் புலிகளின் எண்ணிக்கையை 2 மடங்காக அதிகரிக்க வேண்டும் என்று 9 ஆண்டுகளுக்கு முன் செயிண்ட் பீட்டர்ஸ் பர்க்கில் முடிவு செய்யப்பட்டுள்ள இலக்கை 4 ஆண்டுகளுக்கு முன்னதாகவே எட்டி விட்டோம் என்று கூறினார்.