Categories
மாநில செய்திகள்

“24 மணி நேரம் தண்ணீரில் மிதந்து உயிர் பிழைத்த அதிசயம்”…… எமனோடு போராடி 3 முறை உயிர்த்தப்பிய பெண்…..‌ வியப்பில் மக்கள்…..!!!!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருவட்டார் அருகே பரதபள்ளி மடத்துவிளை பகுதியில் புஷ்பா பாய் (60) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தங்கமணி என்ற கணவரும், 2 மகன்களும், 2 மகள்களும் இருக்கிறார்கள். இந்த பெண்மணி கடந்த 9-ம் தேதி   தாமிரபரணி ஆற்றுக்கு துணி துவைத்து குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக வழுக்கி விழுந்ததில் தண்ணீரில் புஷ்பா அடித்துச் செல்லப்பட்டுள்ளார்‌. அதன் பிறகு புஷ்பா நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு வராததால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் அவரை தேடி பார்த்துள்ளனர்.

ஆனால் நீண்ட நேரம் ஆகியும் கிடைக்காததால் தீயணைப்பு துறையினர் மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ‌இவரை மீட்பு குழுவினர் 2 நாட்களாக தேடிய நிலையில், நேற்று மாலை கோர புற்களில் ஒதுங்கி கிடந்த புஷ்பாவை மீட்பு படையினர் பத்திரமாக மீட்டுள்ளனர். அதன் பிறகு 2 நாட்களாக தண்ணீரில் மிதந்த புஷ்பா உயிருடன் இருப்பதை தெரிந்து கொண்ட மீட்பு படையினர் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பியுள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்ததில் புஷ்பா உயிர் பிழைத்து தற்போது நலமுடன் இருக்கிறார்.

இந்நிலையில் 24 மணி நேரமாக தண்ணீரில் மிதந்த ஒரு 60 வயது பெண் உயிருடன் பிழைத்தது மிகவும் ஆச்சரியமாக இருப்பதாக அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் கூறுகிறார்கள். அதோடு ஏற்கனவே புஷ்பா 2 முறை சாவின் விளிம்பு வரை சென்று உயிர்பிழைத்தவராம். அதாவது ஒரு முறை வெள்ளத்தில் சிக்கி வழுக்கி விழுந்த போது தலையில் அடிபடாததால் உயிர் பிழைத்துள்ளார். இதேபோன்று மற்றொரு முறை கரண்ட் ஷாக் அடித்து தூக்கி வீசப்பட்ட நிலையில், மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சையில் உயிர் பிழைத்துள்ளார். மேலும் சாவுடன் போராடி ஒரு பெண் 3 முறை உயிர்பிழைத்த சம்பவம் மிகவும் அதிசயமாகவும், ஆச்சரியமாகவும் இருப்பதாக கொள்ளப்படுகிறது.

Categories

Tech |