Categories
சினிமா தமிழ் சினிமா

சூர்யாகிட்ட பக்குவம் இருக்கு….. “பதற்றம் இல்லை” வைரமுத்து புகழாரம்….!!

தனக்கு எதிராக பேசுவோர் மீது எதிர்வினையாற்ற வேண்டாம் என சூர்யா கூறிய கருத்தை பாராட்டி வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சமீப நாட்களாக சமூக வலைதளங்களில் சர்ச்சை நாயகியாக விளங்கி வருகிறார் மீரா மிதுன். நடிகர்களான விஜய் மற்றும் சூர்யா குடும்பத்தினர் மீது தரம் தாழ்ந்த விமர்சனங்களை அள்ளி வீசி வருகிறார். இதனால் டுவிட்டரில் கடும் வாக்குவாதம் நிலவி வருகிறது. இந்நிலையில் இதற்கு நடிகர் சூர்யா, தன்னை விமர்சிப்பவர்களுக்கு  எதிராக எதிர்வினையாற்ற வேண்டாம் என தனது பக்குவமான நிலைப்பாட்டை கருத்தாக ட்விட்டரில் தெரிவித்தார்.

இவரது இந்த கருத்துக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், வைரமுத்து இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில்  கருத்து தெரிவித்துள்ளார். அதில், சுமத்தப்பட்ட பலியின்  மீது நடிகர் சூர்யாவின் அணுகுமுறை நன்று. பக்குவப்பட்டவர்கள் பதற்றமுறுவதில்லை பாராட்டுகிறேன். நதியோடு போகும் நுரையோடு கரை கைகலப்பதில்லை என்று கூறியுள்ளார். 

Categories

Tech |