சூர்யா40 திரைப்படத்தில் யார் வில்லனாக நடிக்கப்போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் நடிகராக இருப்பவர் சூர்யா. இவர் தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், பாண்டியராஜ் இயக்கத்தில், டி இமான் இசையில் தயாராகி வரும் தன் 40வது திரைப் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க உள்ளார்.
மேலும் இத்திரைப்படத்தில் யார் வில்லனாக நடிக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அது தமிழ் சினிமாவில் “உன்னாலே உன்னாலே” படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான வினய் தான். இவர் தான் சூர்யா40 திரைப்படத்தில் வில்லனாக நடிக்க உள்ளார். இதனால் ரசிகர்கள் மத்தியில் சூர்யா40 திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.