Categories
சினிமா தமிழ் சினிமா

‘சூர்யா40’ அப்டேட்…. பிறந்தநாளில் தயாரிப்பாளர் சொன்ன குட் நியூஸ்….!!!

பிறந்தநாள் அன்று தயாரிப்பாளர் பாண்டிராஜ் சூர்யா40 அப்டேட்டை கூறியுள்ளார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் முன்னணி நடிகர் சூர்யாவின் ‘சூர்யா40″ உருவாகி வருகிறது. இத்திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா அருள்மோகன் நடிக்கிறார். இப்படத்தில் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சுப்பு பஞ்சு, வினய், தேவதர்ஷினி உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் நடிக்கின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா ஊரடங்கால் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று பிறந்த நாள் கொண்டாடிய இயக்குனர் பாண்டிராஜ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் சூர்யா40 திரைப்படம் குறித்த  தகவலை பகிர்ந்துள்ளார்.

அதில், சூர்யா 40 அப்டேட். அன்பான ரசிகர்களே. 35% படம் முடிஞ்சுருக்கு . எடுத்தவரைக்கும் நல்லா வந்திருக்கு . அடுத்த லாக்டவுன் முடிஞ்சதும் ஸ்டார்ட் பண்ண வேண்டியதுதான். மொத்த குழுவும் தயாரா இருக்கு. டைட்டில் மாஸா, முன் அறிவிப்போட வரும். ஜூலை வரை நேரம் குடுங்க பிளீஸ் என்று கேட்டுகொண்டுள்ளார்.

Categories

Tech |