Categories
சற்றுமுன் சினிமா தமிழ் சினிமா

சூர்யா சிறப்பாக செய்தார்….! விஜய் சேதுபதி ஆதரவு ….!!

நடிகர் சூர்யாவின் கருத்துக்கு நடிகர் விஜய் சேதுபதி ஆதரவு தெரிவித்துள்ளார்.

நடிகை ஜோதிகா சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிகழ்ச்சி கொண்டு தஞ்சை பெரிய கோவில் பற்றிய கருத்துக்களை முன்வைத்தார்கள். அதில் தஞ்சாவூர் பெரிய கோவிலை பாருங்க, இது சிறப்பு மிக்க இடம் சொல்லி இருந்தாங்க. அதே போல நான் ஒரு பள்ளி சென்ற போது அது ரொம்ப மோசமாக இருந்தது. இதனை கண்டு மிகப்பெரிய அதிர்ச்சி அடைந்தேன்.

மதங்களை கடந்து மனிதனே முக்கியம் என்பதை எங்கள் பிள்ளைகளுக்கு சொல்லித்தர விரும்புகிறோம். அறிஞர்கள் ஆன்மிகப் பெரியவர்களின் எண்ணங்களை வெளிப்படுத்திய கருத்தில் உறுதியாக உள்ளோம். தரக்குறைவாக சிலர் அவதூறு பரப்பும் போதெல்லாம் நல்லோர்கள், நண்பர்கள், ரசிகர்கள் துணை நிற்கிறார்கள். இந்த சூழலில் எங்களுக்கு கிடைத்த பேராதரவு நம்பிக்கையும், மகிழ்ச்சியும் அளித்தது.

பள்ளிகளும், மருத்துவமனைகளும் இறைவனின் உறைவிதமாக இடமாக கருதவேண்டும். ஊடகங்கள் சரியான விதத்தில் இச்சர்சையை கையாண்டன. கோவில்களைப் போல பள்ளி, மருத்துவமனைகளையும் உயர்வாக கருத வேண்டும் என ஜோதிகா கூறியிருந்தார். மக்களுக்கு உதவினால் அது கடவுளுக்கு செலுத்தும் காணிக்கையை என்பது திருமூலர் காலத்தைச் சிந்தனை. நல்லோர்கள் சிந்தனைகளை காது கொடுத்து கேட்காத அவர்களுக்கு இது தெரிய வாய்ப்பில்லை என்று நடிகர் சூர்யா அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் நடிகர் சூர்யாவின் கருத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சூர்யாவின் அறிக்கையை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகர் விஜய் சேதுபதி சிறப்பு என பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |