நடிகர் சூர்யா உரிமை தொகை கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் சூர்யா தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், இவர் பல படங்களை தயாரித்தும் வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் ரம்யா பாண்டியன் நடித்த ”ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்” படத்தை தயாரித்திருந்தார். இந்த படம் அமேசானில் வெளியானது.
இந்நிலையில், இந்த படம் பாலிவுட் படத்தின் ரீமேக் தான் என்று தெரிய வந்தவுடன், சூர்யா சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு 50 லட்சம் கொடுத்து இந்த பிரச்சனையை முடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை கேள்விப்பட்ட பலர், இந்த படத்திற்கு ரீமேக் ரைட்ஸ் வாங்கி இருந்தால் கூட குறைவான தொகைதான் செலவாகியிருக்கும் என்று கூறி வருகின்றனர்.