முன்னணி நடிகர் சூர்யா நடிக்கும் புதிய படத்தில் வக்கீலாக நடிக்கிறார் என்று தெரியவந்துள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா தற்போது டிஜே ஞானவேல் இயக்கும் புதிய படத்தில் கவுரவ வேடத்தில் நடித்து வருகிறார். இருளர் பழங்குடியினரின் வாழ்க்கை மற்றும் அவர்களது பிரச்சினைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இப்படத்தில் நடிகர் சூர்யா எந்த கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்று தெரியவந்துள்ளது. அதன்படி நடிகர் சூர்யா பழங்குடியின மக்களுக்காக வாதாடும் வக்கீலாக நடிக்கிறார். இதனை உறுதிப்படுத்தும் வகையில் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.