சூர்யா பட வில்லன் நடிகர் லிங்குசாமி இயக்கும் புதிய படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னணி நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான காப்பான் திரைப்படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமானவர் நடிகர் சிராக் ஜனி. இவர் தற்போது பிரபல இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் RAPO 19 படத்தில் நடிக்க உள்ளார். இத்தகவலை இயக்குனர் லிங்குசாமி அவரது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் நடிகர் சிராக் ஜனிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
Wishing you a very happy birthday @JaniChiragjani & a great year starting with #RAPO19 . pic.twitter.com/hV4RhXoqmp
— Lingusamy (@dirlingusamy) August 14, 2021