சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு 115 பிரபலங்கள் அவரது பிறந்த நாள் போஸ்டர்களை வெளியிட்டுள்ளனர்.
நடிகர் சூர்யா வருகின்ற ஜூலை 23 ல் தன் பிறந்த நாளை கொண்டாட இருக்கிறார். இதனைத் தொடர்ந்து சூர்யாவின் “சூரரைப்போற்று“ திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் அதே சமயத்தில் இயக்குனர் ஹரியின் “அருவா“, வெற்றிமாறனின் “வாடிவாசல்” ஆகிய இரு படங்களிலும் சூர்யா நடிக்கவிருக்கிறார். சூர்யாவின் ரசிகர்கள் இத்திரைப்படத்தை தொடர்ந்து அவரின் பிறந்தநாளை மிக சிறப்பான வகையில் கொண்டாடுவதற்கான முயற்சிகளை எடுத்துள்ளனர். இந்நிலையில் முன்னணி பிரபலங்களான கார்த்தி, ஆர்யா, சிம்ரன், தமன்னா, அதிதி ராவ், மாதவன உட்பட 115 பேர் சூர்யாவின் பிறந்தநாளுக்கான போஸ்டர்களை வெளியிட்டுள்ளனர். இதற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த பாராட்டு கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
அதனைத் தொடர்ந்து டுட்விட்டரில் #SuriyaBirthdayFestCDP ஹேஸ்டேக் என்ற பக்கத்தில் கடந்த சில மணி நேரத்தில் 70 லட்சத்திற்கும் மேலாக போஸ்டர்கள் உபயோகப்படுத்தப்பட்ட தாகவும் இந்திய சினிமாவில் ஒரு நடிகரின் பிறந்தநாள் போஸ்டருக்கு இத்தகைய எண்ணிக்கை கிடைக்கப்பெற்றுள்ளது இதுதான் முதல்முறை என்றும் செய்தி குறிப்புகளில் வெளியாகியுள்ளது.