சூர்யா நடிப்பில் வெளியாக இருக்கும் “வாடிவாசல்” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
சூர்யா நடித்து வந்த “சூரரை போற்று” திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. அதனையடுத்து வெற்றிமாறன் இயக்க இருக்கும் சி.சு செல்லப்பா எழுதிய புத்தகத்தை அடிப்படையாகக் கொண்ட வாடிவாசல் திரைப்படத்தில் சூர்யா நடிக்க இருக்கிறார்.
இந்நிலையில் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு “வாடிவாசல்” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் அனைவரும் சேர்ந்து அவருக்கு சர்ப்ரைஸ் தரும் வகையில் வெளியிட்டுள்ளனர். சூர்யா கிராமத்து இளைஞன் வேடத்தில் உள்ள போஸ்டர் தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாக பரவிவருகின்றது.