Categories
சினிமா தமிழ் சினிமா

சூர்யா – ரம்யா பாண்டியன் படத்தில் இணைந்த பிரபல ஹீரோயின்… யார் தெரியுமா?…!!!

நடிகர் சூர்யா தயாரிப்பில் ரம்யா பாண்டியன் நடிக்கும் படத்தில் பிரபல ஹீரோயின் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் .

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சூர்யா நடிப்பதோடு மட்டுமல்லாமல் படங்களை தயாரிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார் . இவர் தனது 2டி நிறுவனம் மூலம் தயாரித்த பசங்க 2, உறியடி 2, கடைக்குட்டி சிங்கம், 36 வயதினிலே ,24 ,பொன்மகள் வந்தாள், சூரரைப் போற்று ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது . இதையடுத்து நடிகர் சூர்யா தயாரிக்கும் படத்தை புதுமுக இயக்குனர் அரிசில் மூர்த்தி இயக்குகிறார் . பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்த ரம்யா பாண்டியன் இந்த படத்தில் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் .

பட பூஜையின் போது எடுத்த புகைப்படம்

இந்நிலையில் பிரபல நடிகை வாணி போஜன் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் . இந்த படத்தின் மூலம் நடிகர் மித்துன் மாணிக்கம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமாகிறார் . மேலும் பாடகர் கிரிஷ் இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது . இந்த பூஜையில் படக்குழுவினருடன் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி வெங்கட்ராமன் ,சக்தி பிலிம் பேக்டரி பி.சக்தி வேலன், தமிழ்நாடு துப்பாக்கி சுடுதல் சங்க செயலாளர் ஆர். ரவி கிருஷ்ணன் ,கலரிஸ்ட் பாலாஜி கோபால் ,இயக்குனர் ஜேஜே பிரடெரிக், இணை தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன் உள்ளிட்ட பலர் கொரானா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் கலந்து கொண்டுள்ளனர் .

Categories

Tech |