Categories
அரசியல் மாநில செய்திகள்

சூர்யா சொல்லிட்டாரு… பாஜக அரசு கவிழ போகுது…. நோஸ்கட் செய்த எச்.ராஜா …!!

நடிகர் சூர்யாவை கருத்தை கிண்டல் செய்யும் வகையில் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா  கருத்து பதிவிட்டுள்ளார்.

நாடு முழுவதும் நேற்று முன்தினம் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நடந்து முடிந்துள்ளது. நீட் தேர்வு நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து தற்போது வரை அதன் மீது விமர்சனங்கள் எழுந்து கொண்டிருக்கின்றன. தமிழகத்திலும் நேற்று முன்தினம் நடந்த நீட் தேர்வுக்கு தயாராகி கொண்டு இருந்த 3 மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.  நேற்று நடந்த தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரிலும், நாடாளுமன்ற கூட்டத் தொடரிலும்  விவகாரம் எதிரொலித்தது.

அதே போல நீட் தேர்வால் மாணவர்கள் தற்கொலை கொண்ட நிகழ்வு குறித்து நடிகர் சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த அறிக்கை பல்வேறு விவாதங்களை எழுப்பியுள்ளது. கொரோனா காரணமாக நீதிமன்றங்கள் காணொலி காட்சி வாயிலாக நடைபெறுகின்றது என்பதையெல்லாம் சுட்டிக்காட்டி சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என்று உயர்நீதிமன்ற நீதிபதி பாலசுப்பிரமணியன் தலைமை நீதிபதிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதே போல நடிகர் சூர்யாவின் கருத்துக்கு ஆதரவாகவும் ஓய்வு பெற்ற நீதிபதிகள், வழக்கறிஞர்கள் கடிதம் எழுதிவருகின்றனர். நடிகர் சூர்யா மீது எந்த விதமான நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் பதிவு செய்யக் கூடாது என அந்த கடிதத்தில் கூறியுள்ளனர். இதனிடையே #TNStandWithSuriya  என்ற ஹேஷ்டாக் இந்தியளவில் ட்ரெண்டாகியது அதே போல #KeralaStandWithSuriya  #நீட்என்ற_மனுநீதிதேர்வு போன்ற ஹேஷ்டாக்குகளும் ட்ரெண்டாகி பலரும் தங்களது கருத்தை தெரிவித்து வந்தனர்.

 

அதே நேரத்தில் பாஜகவினர் நடிகர் சூர்யாவின் கருத்தை எதிர்த்து வருகின்றனர். சூர்யாவின் கருத்தை கிண்டல் செய்யும் வகையில் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் போட்டோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், நடிகர் சூர்யா நீட் தேர்வுக்கு எதிராக அறிக்கை விட்டிருக்கிறார். இதனால இந்தியாவில் ஆட்சி கவிழ வாய்ப்பு இருக்குன்னு தமிழக ஊடகங்கள் சொல்றாங்க.

சூர்யாவே சொல்லிட்டாரு ? உடனே நீட் யுபிஎஸ்சி, கேட், பேங்க் எக்ஸாம், ஜெஇஇ, ஐஐடி இப்படி என்ன போட்டித்தேர்வுகள் இருக்கோ எல்லாத்தையும் தடை செஞ்சிருங்க. சூர்யா யாரை கை காட்டுறாரோ அவுங்களையே டாக்டர், ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ், இன்ஜினியர், அரசு அதிகாரிகள் போஸ்ட்ல உட்கார வையுங்க என்று எழுதப்பட்டுள்ளது. பார்த்ததில் ரசித்தது என எச்.ராஜா அதனை பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |