Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் பிரபல இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் சூர்யா….. வெளியான மாஸ் தகவல்….!!!

இயக்குனர் பாலா இயக்கத்தில் சூர்யா புதிய படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல முன்னனி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. தற்போது இவர் நடிப்பில் ”எதற்கும் துணிந்தவன்” திரைப்படம் ரிலீசாக காத்துக் கொண்டிருக்கிறது. இந்த திரைப்படம் வரும் மார்ச் 10ஆம் தேதி தியேட்டரில் ரிலீசாக இருக்கிறது.

மீண்டும் இயக்குநர் பாலாவுடன் இணையும் சூர்யா? | Director bala surya combo  upcoming film announcement soon | Puthiyathalaimurai - Tamil News | Latest  Tamil News | Tamil News Online | Tamilnadu News

ஜெய் பீம் திரைப்படம் வெற்றியை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியாகும் இந்த படத்தின் மீது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்நிலையில், பிரபல இயக்குனர் கூட்டணியில் சூர்யா மீண்டும் ஒரு புதிய படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பிரபல இயக்குனர் பாலா இயக்கத்தில் இவர் தன்னுடைய அடுத்த படத்தில் நடிக்க இருப்பதாகவும், இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் ”பிதாமகன்” திரைப்படம் ரிலீஸ் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |