சூர்யா நடிப்பில் வெளியாக இருக்கும் சூரரைப் போற்று படம் இப்போதைக்கு வெளியாகாது என நடிகர் சூர்யா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான படம் சூரரைப்போற்று. இந்தப்படம் ஊரடங்கு காரணமாக திரையரங்கு மூடி உள்ள சூழ்நிலையில் அமேசான் பிரைம் இல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. தங்களின் ஆசை நடிகரின் படத்தை திரையில் பார்க்க ஆவலாக இருந்த ரசிகர்களுக்கு அமேசான் பிரைமில் வெளியாகும் என்ற இந்த அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும், நடிகர் சூர்யாவின் வேண்டுகோளை ஏற்று ரசிகர்கள் பொறுமை காத்து வந்தனர்.
இந்த நிலையில் தற்போது நடிகர் சூர்யா சூரரைப் போற்று உடனே வெளியாகாது என்று அறிக்கை வெளியிட்டுள்ளார். சூர்யா நடித்து அமேசானில் வெளியாக இருந்த சூரரைப் போற்று படம் தவிர்க்க முடியாத காரணங்களால் தள்ளிப் போவதாக நடிகர் சூர்யா அறிக்கை வெளியிட்டுள்ளார். படம் விமானத் துறை சம்பந்தமான படம் என்பதால் இந்திய விமானத்துறை படத்திற்கு அனுமதி வழங்க தாமதம் செய்தால் ரசிகர்கள் பொறுமை காக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் இந்த அறிக்கையுடன் நட்பையும், அன்பையும் வெளிப்படுத்தும் விதமாக பிரண்ட்ஷிப் சாங் ஒன்றையும் வெளியிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.